டீசல் விலைக்கு உயர்வுக்கு ஏற்றவாறு ஊதிய உயர்த்தி வழங்குமாறு ஓலா ஓட்டுநர்கள் ஈக்காட்டுத்தாங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி சென்னை, ஈக்காட்டுத்தாங்களில் உள்ள ஓலா தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு அந்நிறுவனத்தின் கார் ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தின் போது டீசல் விலை உயர்வுக்கு ஏற்றவாறு தங்களுக்கு உதிய உயர்வு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். அத்துடன் 4 ஆண்டுகளுக்கு முன் நடைமுறையில் இருந்தது போல, இண்டிகா போன்ற சிறிய ரக கார்களுக்கு முதல் 4 கிலோ மீட்டருக்கு ரூ.100ம், கூடுதலான ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.18 வழங்க வேண்டும் என்றனர்.
சடான் வகை வாகனங்களுக்கு முதல் 4 கி.மீட்டருக்கு ரூ.100ம், கூடுதலான ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.20 வழங்க வேண்டும்
என கோரிக்கை விடுத்தனர். இன்னோவா, சைலோ, டவேரா போன்ற பெரிய ரக வாகங்களுக்கு முதல் 4 கி.மீட்டருக்கு ரூ.150ம்
கூடுதலான ஒவ்வொரு கி.மிட்டருக்கும் ரூ.22 நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் ஆட்டோக்களை போல,
கால்டாக்ஸிகளுக்கும் முறையான கட்டண விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். அவர்களுடன்
காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், ஓட்டுநர்கள் சாலைமறியலில் ஈடுபடத்தொடங்கினர். இதையடுத்து
அவர்களை காவல்துறையினர் கைது செய்து, கிண்டியில் உள்ள ரேஸ் கோர்சில் தங்க வைத்துள்ளனர்.