தமிழ்நாடு

ஒகி புயல் எதிரொலி: 1 கோடி மதிப்பிலான மீன்கள் வீண்

webteam

ஒகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான மீன்கள் தேக்கமடைந்து வீணாகிவிட்டதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

ஒகி புயலில் சிக்கி பெரும் போராட்டத்திற்குப் பிறகு கரைக்கு வந்த படகுகளில் மீன்கள் தேங்கிவிட்டன. மேலும், புயலில் சிக்கி கரை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் கடும் சேதமடைந்துள்ளதாகவும் அவற்றை சீரமைக்க பெரும் பொருட்செலவு ஆகும் எனவும் படகு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், மீனவர்களுக்கு இந்தளவிற்கு இழப்பீடுகள் இருந்தும், ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்று, கடலில் தத்தளித்து வரும் 500க்கும் மேற்பட்ட மீனவர்களை மீட்க அரசாங்கம் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.