தமிழ்நாடு

எண்ணெய் கசிவு: கதிராமங்கலம் விளை நிலங்களில் பாதிப்பு

webteam

தஞ்சை கதிராமங்கலத்தில் வயல்வெளிகளில் படிந்த எண்ணெய் கசிவை முழுமையாக சரிசெய்யாததால் நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கதிராமங்கலத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேறக்கோரி ஒருபுறம் போராட்டம் நீடித்து வருகிறது. ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறுகளால் குடிநீர் மட்டும் இன்றி விளைநிலங்களும் வீணாகி வருவதாக கூறுகிறார் இந்த பகுதியில் விவசாயம் செய்துவரும் ஸ்ரீராம்.

10 ஆண்டுகளுக்கு மேலாக இயற்கை முறையில் பாரம்பரிய நெல் வாழை பயிறுவகைகளை சுமார் 10 ஏக்கரில் சாகுபடி செய்து வருகிறேன், கடந்த ஜூன் 30 ஆம் தேதி ஏற்பட்ட ‌எண்ணெய் கசிவால், ஒரு ஏக்கர் முழுவதும் எண்ணெய் படிந்துள்ளது. எண்ணெய் படிமம் முழுமையாக அகற்றபடாமல் உள்ள நிலையில், அவ்வப்போது பெய்யும் மழையால் அனைத்து நீர்நிலைகளுக்கும் எண்ணெய் பரவி வருகிறது. இதே நிலை நீடித்தால் இந்த பகுதியில் சாகுபடியே செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடும். எண்ணெய் கலந்த நீரால் வயலில் இறங்கி வேலை செய்யவே அச்சமாக இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.