அதிமுக - பாஜக
அதிமுக - பாஜக  ஃபேஸ்புக்
தமிழ்நாடு

கூட்டணி குறித்தோ, பாஜக குறித்தோ பொதுவெளியில் கருத்து தெரிவிக்கக் கூடாது: அதிமுக தலைமை உத்தரவு

ஜெனிட்டா ரோஸ்லின்

முன்னதாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜக உடன் கூட்டணி இல்லை என்று அதிரடியாக அறிவித்திருந்தார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

இதனைத்தொடர்ந்து தற்போது அதிமுக தலைமையானது மாவட்ட செயலாளர்களுக்கும், பல்வேறு அமைப்பில் இருக்கும் நிர்வாகிகளுக்கும் இது தொடர்பாக தற்போது அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அதில் முக்கியமாக கூட்டணி குறித்தோ அல்லது பாஜக குறித்தோ பொதுவெளியில் கருத்து தெரிவிக்கக் கூடாது என்று மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை உத்தரவினை பிறப்பித்துள்ளது.

கூட்டணி தொடர்பாக ஏற்கெனவே தனது நிலைப்பாட்டை அதிமுக தலைமை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ள நிலையில், வேறு யாரும் இதுதொடர்பாக பொது வெளியில் பேசக்கூடாது என்ற விஷயமும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

Edappadi palaniswami

அதேபோல் பொதுவெளியில் போஸ்டர் ஓட்டுவது, சமூக வலைதளங்களில் இது குறித்த தங்களது கருத்துகளை தெரிவிப்பதை தவிர்க்குமாறும் மாவட்ட செயலாளர்கள் மூலம் அனைத்து அமைப்பு நிர்வாகிகளுக்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உடன் மட்டுமே சர்ச்சை தொடரும் நிலையில், பாஜக குறித்து விமர்சிப்பது தேசிய தலைமையை விமர்சிக்கும் வகையில் அமையும் என்பதால் தற்போது இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டதற்கான காரணமாக பார்க்கப்படுகின்றது.