தமிழ்நாடு

மாநிலங்களவைத் தேர்தல் முடிவு இன்று அறிவிப்பு

மாநிலங்களவைத் தேர்தல் முடிவு இன்று அறிவிப்பு

webteam

தமிழகத்திலிருந்து மாநிலங்களவையின் உறுப்பினர்களாக 6 பேர் போட்டியின்றி தேர்வானது குறித்து இன்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகிறது.

தமிழகத்தில் 6 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தலில், சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கைபடி அதிமுக, திமுக சார்பில் தலா 3 உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும். அதன் அடிப்படையில், அதிமுக சார்பில் முஹம்மத் ஜான், சந்திரசேகரன் ஆகியோரும், தேர்தல் ஒப்பந்தப்படி பாமகவின் அன்புமணியும் வேட்புமனுதாக்கல் செய்தனர். 

திமுக சார்பில் தொமுசவின் சண்முகம், வில்சன் ஆகியோரும், தேர்தல் ஒப்பந்தப்படி மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் வேட்புமனுதாக்கல் செய்தனர். தேசதுரோக வழக்கில் ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்டதால், வைகோவின் வேட்புமனு ஏற்கப்படுமா என்ற குழப்பம் ஏற்பட்டது. எனவே, திமுகவின் என்.ஆர்.இளங்கோ மாற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால், வைகோவின் மனுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, இளங்கோ தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றார். 

இதையடுத்து, அதிமுக சார்பில் 3 பேரும், திமுக சார்பில் 3 பேரும் எம்பி ஆவது உறுதியானது. இன்று வேட்பு மனுவை திரும்பப்பெற இறுதி நாள் ஆகும். 2 கட்சிகள் சார்பிலும் தலா 3 பேர் போட்டியின்றி எம்பி ஆகியிருப்பது, இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானதற்கான சான்றிதழை, தேர்தல் அலுவலரும் சட்டப்பேரவை செயலாளருமான சீனிவாசன் தலைமைச் செயலகத்தில் இன்று வழங்குவார்.