தமிழ்நாடு

ஆலோசனைக் கூட்டத்தில் தூங்கி வழிந்த அதிகாரிகள்

ஆலோசனைக் கூட்டத்தில் தூங்கி வழிந்த அதிகாரிகள்

Rasus

விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சர் சி.வி. சண்முகம் முன்னிலையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் தூங்கிக்கொண்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தலைமையில் டெங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் சி.வி.சண்முகமும் கலந்து கொண்டார். நாட்டையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் டெங்கு குறித்து ஆலோசிப்பதற்காக கூட்டப்பட்ட இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் சிலர் தூங்கிக் கொண்டிருந்தனர். இதுபோன்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து கவனம் செலுத்தாமல், தூங்கிக்கொண்டிருந்தால் டெங்குவை எப்படி கட்டுப்படுத்த முடியும் என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.