தமிழ்நாடு

சென்னை: ஏரியில் இருந்து கிளம்பிய கரும்புகை – காரணம் தெரியாமல் அதிகாரிகள் ஆய்வு

webteam

பல்லாவரம் ஏரியில் இருந்து கரும்புகை வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலையில் பாலத்திற்கு அருகே பக்கவாட்டில் ஏரிக்கு அடிப்பகுதியில் இருந்து கடும் கரும்புகை வெளியாகி வருகிறது. புகை வெளியாவதற்கான காரணம் தெரியாமல் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

பூமிக்கடியில் புதைவட கேபிள் தீப்பிடித்துள்ளதா எனவும் பார்த்து வருகின்றனர். தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 நிமிடங்களுக்கு மேலாக ஏரிக்கருகே இருந்து கரும்புகை வெளியாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..