தமிழ்நாடு

மதுக்கடைகளில் தீபாவளிக்கு பணம் வசூல் - கலால் வரி உதவி ஆணையர் கைது

மதுக்கடைகளில் தீபாவளிக்கு பணம் வசூல் - கலால் வரி உதவி ஆணையர் கைது

webteam

மதுரை மாநகர் பகுதியில் உள்ள மதுக்கடைகளில் தீபாவளி வசூலில் ஈடுபட்ட கலால் வரி உதவி ஆணையர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மதுரை மாவட்ட கலால் வரி அலுவலகத்தில் உதவி ஆணையராக பணியாற்றி வருபவர் மாரிமுத்து. இவர் மதுரை மாநகர் பகுதியில் உள்ள மதுக்கடைகளில் உள்ள ஊழியர்களிடம் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் வந்ததுள்ளது. இதனை தொடர்ந்து இன்று கருப்பாயூரணி அருகே உள்ள சீமான்நகர் பகுதியில் உள்ள மதுக் கடையில் லஞ்ச பணத்தை பெற மாரிமுத்து வந்துள்ளார். 

அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையில் 10 பேர் கொண்ட காவல்துறையினர் உதவி ஆணையர் மாரிமுத்துவை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடமிருந்து கணக்கில் வராத 35 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை கைபற்றினர். அத்துடன், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.