train accident pt desk
தமிழ்நாடு

Odisha Train Tragedy | ஓடிஷா ரயில் விபத்து: தமிழக முதல்வரின் நிகழ்ச்சிகள் ரத்து

ஒடிஷா ரயில் விபத்து காரணமாக ஒடிஷா மாநிலத்தில் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தமிழக முதலமைச்சரின் நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Kaleel Rahman

கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்துவது மற்றும் ஓமந்தூராரில் உள்ள சிலைக்கு மரியாதை என இரண்டு நிகழ்ச்சிகள் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செம்மொழி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மலர்க் கண்காட்சிக்கு முதல்வர் செல்லும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இன்று மாலை நடைபெறவிருந்த கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.