தமிழ்நாடு

குமரியில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து

குமரியில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து

Rasus

ஒகி புயல் காரணமாக கன்னியாகுமரியில் இருந்து புறப்பட இருந்த அனைத்து விரைவு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ள நிலையில், புயலுக்கு ‘ஒகி’ என பெயரிடப்பட்டுள்ளது. ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் அதிக பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. ஏராளமான மரங்கள் சாலைகளில் முறிந்து விழுந்துள்ளன. எனவே பாதுகாப்பு நலன் கருதி பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என கன்னியாகுமரி ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் ஒகி புயல் காரணமாக கன்னியாகுமரியில் இருந்து புறப்பட இருந்த அனைத்து விரைவு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. புயல் காரணமான ஏராளமான மரங்கள் தண்டவாளங்களில் விழுந்து கிடப்பதால் ரயில்களை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தண்டவாளங்களில் விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே கூறியுள்ளது.