தமிழ்நாடு

வங்கிகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

வங்கிகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

Rasus

அதிமுகவின் வங்கிக் கணக்குகள் மூலமாக தமது எழுத்துபூர்வ ஒப்புதல் இன்‌றி யாரையும் பணப்பரிவர்த்தனை செய்ய அனுமதிக்க வேண்டாம் என முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வங்கிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக இரண்டு வங்கிகளுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‌அதிமுகவின் சட்டவிதிப்படி கட்சியின் பொதுச்செயலாளரை, அடிப்படை உறுப்பினர்களே தேர்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அதன்படி, ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர், பொதுச்செயலாளர் பதவி காலியாக‌வே உள்ளது எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.‌

அதனால், ஏற்கனவே ஜெயலலிதா நியமித்தபடி தாம் தான் கட்சியின் பொருளாளர் என கூறியுள்ள முதலமைச்சர், அதனால் தமது அனுமதி இன்றி அதிமுக வங்கிக் கணக்கில் யாரும் பணப்பரிவர்த்தனை செய்ய அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.