சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அரை மணி நேரத்திற்கு மேலாக ரஜினியுடன் சந்தித்து பேசினார்
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தில் அவரைச் சந்தித்தார். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக ரஜினியுடன் பேசிக்கொண்டிருந்தார்.
இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “புத்தாண்டை முன்னிட்டு மரியாதை நிமித்தமாக ரஜினியைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். ரஜினிகாந்த் திடகாத்திரமாக ஆரோக்கியத்துடன் உள்ளார். அரசியல் எதுவும் பேசவில்லை.. அண்ணா பல்கலைக்கழகம் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே அறிக்கை வெளியிட்டு உள்ளேன். வரும் காலங்களில் இது போன்ற சம்பங்கள் நடைபெறாமல் தடுப்பது அரசின் கடமை” எனத் தெரிவித்தார்.
இன்று காலை புத்தாண்டு வாழ்த்து செய்தி வெளியிட்ட ரஜினிகாந்த்.. "நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான். கெட்டவர்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான் கைவிட்டு விடுவான்" என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.