தமிழ்நாடு

`30 ஆண்டுகளாக பதவி உயர்வில்லை' - டிஎம்எஸ் வளாகத்தில் போராட முயன்ற செவிலியர்கள் கைது

webteam

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சுகாதார செவிலியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிராம சுகாதார செவிலியர்களுக்கு 30 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாததை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தியும், கிராம சுகாதார, செவிலியர்களின் முதல் கட்ட பதவி உயர்வை முழுமையாக அமல்படுத்த வலியுறுத்தியும், ஒவ்வொரு சுகாதார மாவட்டத்திற்கும் ஒரு சமுதாய நல செவிலியர் பணி இடத்தை உருவாக்க வெளியிடப்பட்ட ஆணையை அமல்படுத்த வலியுறுத்தியும் செவிலியர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.

இவற்றுடன் சேர்த்து சுமார் 12 கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று அனைத்து சுகாதார தமிழ்நாடு செவிலியர்கள் சங்கத்தினர் 500க்கும் மேற்ப்பட்டோர் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தோட்டத்தில் ஈடுபட முயன்ற செவிலியர்களை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் டிஎம்எஸ் வளாகத்திற்கு காவல்துறையினர் கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்தினர்.