தமிழ்நாடு

”முதல்வர் ஐயா இதில் தலையிடணும்” .. போராட்டம் குறித்து செவிலியர்கள் என்னதான் சொல்கிறார்கள்?

”முதல்வர் ஐயா இதில் தலையிடணும்” .. போராட்டம் குறித்து செவிலியர்கள் என்னதான் சொல்கிறார்கள்?

webteam
கொரோனா காலகட்டத்தில் தமிழகம் முழுதும் பல்வேறு மாவட்டங்களில் ஒப்பந்த செவிலியர்கள் பணியில் சேர்ந்தனர். இதில் 2019 ம் ஆண்டு MRB மருத்துவ தேர்வாணையத்தின் மூலம் பணியில் செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்தனர். இதில் 2472   ஒப்பந்த செவிலியர்களை பணி நீக்கம் செய்து டிசம்பர் 30 ல் தமிழக அரசாணை வெளியீட்டு இருக்கிறது. இதனால் கொரோனா  கால கட்டத்தில்  2 வருடம் 7 மாதங்கள் பணியில் இருந்த செவிலியர்களுக்கு வாழ்வாதரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக முழுக்கங்களை எழுப்பினர். ஏற்கனவே கொரோனா காலத்தில் மருத்துவர்களை பணி நிரந்தரம் செய்தததுபோல் தங்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். 
போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் உடன் மருத்துவ பணிகள் இயக்கத்தின் இயக்குனர் ஹரிசுந்தரி உள்ளிட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் கோரிக்கை தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளரிடம் பேசப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதில் கோரிக்கையில் முன்னேற்றம் எதுவும் இல்லாததால் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர். தொடர்ந்து அறவழியில் போராட்டங்களை தொடர்வதாகவும், நாளை காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும் என்றும் இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஒப்பந்த செவிலியர்கள் பங்கேற்பார்கள் என நிர்வாகிகள் அறிவித்தனர்.

போராட்டம் தொடர்பாக, ஒப்பந்த செவிலியர்கள் சங்கத்தின் துனைத்தலைவர் உதயக்குமார் அவர்கள் நம்மிடம் பேசியப்பொழுது,

உங்களுக்கு மாற்று பணியாக ஆரம்ப சுகாதாரத்தில் பணி வழங்குவதாக அரசு அறிவித்த பொழுது நீங்கள் போராட்டத்தில் ஈடுபட காரணம் என்ன?

”அரசு தரப்பில் தவறான தகவல்களை தெரிவித்து வருகிறார்கள். இட ஒதுக்கீடு சரிவர பின்பற்றாமல் முறைகேடாக பணியில் சேர்ந்ததாக சொல்கிறார்கள். இதை MRP Board நிறுபிக்கவேண்டும். ஏனென்றால் எங்களின் பணி ஆனையில் இட ஒதிக்கீடு முறையாகப்பின் பற்றப்பட்டு பணியில் சேர்ந்ததற்கான ஆதாரம் இருக்கிறது. ஆரம்ப சுகாதாரத்தில் பணி வழங்கினால் ஒவ்வொரு பதினொன்று மாதத்திற்க்கு ஒரு முறை பணி இடை நீக்கம் செய்யப்பட்டு கடைசி வரை ஒப்பந்த ஊழியராக இருக்கும் நிலைக்கு தள்ளப்படுவோம். காவல் துறை இப் போராட்டத்திற்கு அணுமதி மறுத்துள்ளது” என்றார்.

போராட்டத்தில் ஈடுபட்டு வருகிற ஒப்பந்த ஊழியர் விஜய லெட்சுமி பேசுகையில், 

அரசு உங்களுக்கு மாற்று பணி வழங்குவது பற்றி உங்களிடம் பேசினார்களா? என்ற கேள்விக்கு,

“அப்படி எதுவும் பேசவில்லை. 2021 மார்ச் மாதம் ஒரு G.O. தந்தார்கள். இப்பொழுது எந்த முன் அறிவிப்பும் இன்றி எங்களை பணி நீக்கம் செய்தது இருக்கிறார்கள். நாங்கள் முறையாக MRP தேர்வு எழுதி தான். பணிக்கு வந்துள்ளோம். பணி பாதுகாப்புக்காக தான் அரசு வேலை கேட்கிறோம். ஒப்பந்த பணி எங்களுக்கு பணி பாதுகாப்பு தேவை” என்றார்.

மேலும், ‘கொரோனா காலகட்டத்தில் நாங்கள் தீவிர பணியில் ஈடுபட்டோம். எங்கள் பணி நிரந்தரம் ஆகும் வரை எங்கள் போராட்டத்தை கைவிடப்போவதில்லை’ என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.