தமிழ்நாடு

”மத்திய அரசுக்கு இணையான ஊதியம்” 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

”மத்திய அரசுக்கு இணையான ஊதியம்” 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

webteam

தமிழகத்தில் மத்திய அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வலியுறுத்தி செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில், ஸ்டான்லி அரசு மருத்துவமனை. ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைகளில், மத்திய அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், கொரோனா காலத்தில் தொற்று ஏற்பட்டவர்களுக்கும், உயிரிழந்த செவிலியர் குடும்பத்திற்கும் தமிழக அரசு உதவ வேண்டும், தற்காலிகமாக பணியாற்றும் 6 ஆயிரம் செவிலியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், சிறப்பு அலவன்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் ஆர்பாட்டம் நடத்தினர். காலையில் ஆர்ப்பாட்டம் செய்த செவிலியர்கள் பின்னர் கறுப்பு சின்னம் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

இதே கோரிக்கைகளுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகம் மற்றும் தஞ்சை அரசு மருத்துவமனைகளில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, கருப்புப்பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.