வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்து ஆறு நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் கைவிரலை பணியிலிருந்த அருணாதேவி என்ற செவிலியர் துண்டித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று, பிறந்து ஆறு நாட்களே ஆன வேலூர் முள்ளிப்பாளையத்தை சேர்ந்த விமல்ராஜ் - நிவேதா தம்பதியினரின் பச்சிளம் ஆண் குழந்தையின் வலது கையில் ஒட்டப்பட்டிருந்த டேப்ஐ செவிலியர் அருணாதேவி என்பவர் கத்தரிக்கோலால் கட்பண்ணும் போது கை கட்டை விரலை தவறுதலாக துண்டாக்கியுள்ளார்.
இவ்விவகாரத்தில் குழந்தையின் உறவினர்கள் அளித்த புகாரியின் அடிப்படையில், செவிலியர் அருணா தேவி மீது வேலூர் தாலுகா காவல்துறையினர் அஜாக்கிரதையாக செயல்பட்டது என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.