சீமான் புதிய தலைமுறை
தமிழ்நாடு

தரக்குறைவான வார்த்தையை விட்டு மோசமாக கத்திய சீமான்! முகம் சுழிக்க வைத்த பேட்டி

திமுகவின் சேர்ந்த நாதக நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்து புதிய தலைமுறைக்கு பிரத்யேகமாக பேட்டியளித்திருந்த சீமான், பெண் பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு அநாகரீகமான மூறையில் , மிகவும் தரைகுறைவான வார்த்தைகளை பயன்படுத்தி பதில் அளித்துள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உட்பட மாற்று கட்சியை சேர்த்தவர்கள் என மொத்தம் சுமார் 3 ஆயிரம் பேர் இன்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர்.

இந்நிலையில், திமுகவின் சேர்ந்த நாதக நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்து புதிய தலைமுறைக்கு பிரத்யேகமாக பேட்டியளித்திருந்த சீமான், பெண் பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு அநாகரீகமான மூறையில் , மிகவும் தரைகுறைவான வார்த்தைகளை பயன்படுத்தி பதில் அளித்துள்ளார்.

நாதக சீமான்!

” திமுகவில் சேர்ந்த அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இன்னும் சிலறை அனுப்பி வைக்கிறேன் சேர்த்துக்கொள்ளுங்க. திமுகவில் சேர்ந்தவர்களை எல்லாம் சில நாட்களுக்கு முன்பே கட்சியில் இருந்து வெளியில் சென்றுவிட்டவர்கள். தற்போது, பெரியாரை முன்னிறுத்தி அதற்கு பின்னால், ஒழிந்து கொண்டிருக்க வேண்டிய தேவை திராவிடர்களுக்கு இருக்கிறது. இதனால், நீங்கள் வைத்திருக்கும் பெரியாரை தயவு செய்து நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். அந்த சிலையை அப்படியே தூக்கிகொண்டு ஈரோடு தேர்தலுக்கு வாருங்கள்.

பெரியாருடைய கோட்பாடு எல்லாம் பேசி பேசி ஓட்டு கேளுங்க. அதுதானே, பெரியாரை போற்றுவது , மதிப்பது. பெரியார் படத்தை வீடு வீடாக கொடுத்து ஓட்டு கேளுங்கள். காந்தி படத்தை கொடுத்து கேட்கக்கூடாது .

அண்ணாவுடைய பெருமைகளை கட்சியை நடத்துற பெருமக்களுக்கு சொல்லலாமல், பிரசாந்த் கிஷோர் பாண்டேவை கூட்டிவந்து ஸ்ட்டர்ஜி செய்து ஆட்சிக்கு வருகிறேன் என்று பிச்சை கேட்கிற இந்த கட்சியெல்லாம் என்னையே பேசலாமா? “ இது போன்ற பல கருத்துக்களை பேசிய நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், இடையே பெரியார் பேசியதாக சொல்லி மோசமான பல வார்த்தைகளை பயன்படுத்தினார். அவர் பயன்படுத்த வார்த்தைகள் முகம் சுழிக்கும் வகையில் இருந்தது.