NTK leader Seeman spoke about tamil language importance PT
தமிழ்நாடு

”பொழுதுபோக்கு தளத்தில் தலைவர்களை தேடாதீர்கள்; போராட்டக் களத்தில் தேடுங்கள்” - சீமான் ஆவேச பேச்சு

”உலகின் முதன்மை மொழி தமிழ் எங்கள் நாட்டில் இருப்பது எங்களுக்கு பெருமை என்று ஒவ்வொரு நாட்டிற்கும் பிரதமர் மோடி செல்லும்போது கூறி வருகிறார்” என்றார் சீமான்.

PT WEB

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில் எஸ்ஆர்எம் தமிழ் பேராயம் சார்பில் தமிழகம் முழுவதும் 9 மண்டலங்களில் ‘சொல் தமிழா சொல்’ நிகழ்ச்சி நடைபெற்று வந்த நிலையில், இறுதிச்சுற்று, எஸ் எம் பல்கலைக்கழகம் நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை மற்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பங்கேற்றனர்.

சீமான் பேசியது:-

பாஜக என்ற ஒன்று தமிழகத்தில் இருக்கிறது அது வளர்கிறது என்று தன்னுடைய செயலாற்றலால் நிகழ்த்தி காட்டிய என்னுடைய அன்பு இளவல் அண்ணாமலை.

பேச்சு என்றால் வெட்டி பேச்சு, வெற்றி பேச்சு என்று உள்ளது. பேச்சு என்பது நம் எண்ணத்தை வெளிப்படுத்தும் கண்ணாடி என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பேசிப் பேசியே காலத்தை ஓட்டிட்டான் என்று சொன்னவர்கள் உண்டு. பேசிப் பேசியே நின்று விட்டான் என்று சொன்னார்கள்.

ஒரு சொல் உறங்க சொல்லும் ஒரு சொல் உற்சாகப்படுத்தும். சொற்களை இதயத்தில் இருந்து எடுத்து பேசினால் உணர்வு வரை செல்லும். தமிழ் படிப்பதே பாவம் என்ற நாடாகிவிட்டது. இங்கு பேசிய மாணவர்கள் இலக்கியங்களை பேசினார்கள். மிகவும் சந்தோஷமாக உள்ளது. அன்றைக்கு தமிழ் வைத்து சங்கம் வளர்த்தார்கள். இன்று தமிழ் வைத்து சாதி வளர்க்கிறார்கள்.

அண்ணாமலை - சீமான்

உன் தாய் வழியில் மருத்துவத்தை கற்றுக் கொள். ஆங்கிலம் ஒரு மொழி அது அறிவல்ல. நீ வணங்குற எல்லா தெய்வம் கருப்பு தான். எல்லாம் வெள்ளையா இருப்பதால் அதுநாட்டில் பெரிய தொல்லை. உலகத்தில் எம்மொழியும் கற்போம் நாங்கள் வாழ! என் மொழியை கற்போம் இனம் வாழ. இயேசு பிறந்த 500 ஆண்டுகளுக்கு பின்பு பிறந்த மொழி ஆங்கிலம் இயேசு பிறந்தாய் என்று ஒரு ஆண்டுகளுக்கு முன்பு தொல்காப்பியத்துடன் இருந்த மொழி தமிழ்

உலகின் முதன்மை மொழி தமிழ் எங்கள் நாட்டில் இருப்பது எங்களுக்கு பெருமை என்று ஒவ்வொரு நாட்டிற்கும் பிரதமர் மோடி செல்லும்போது கூறி வருகிறார். தாய் மொழியை மறந்த இனம் சுடுகாட்டில் பிணம்.

நான் தமிழிலிருந்து தேசியத்தை பார்ப்பதாகவும், அவர் தேசியத்திலிருந்து தமிழைப் பார்ப்பதாக அண்ணாமலை கூறினார். அவருக்கு நான் ஒன்றைக் கூறிக்கொள்கிறேன். நான் என் அம்மாவுக்கு முதலில் மகனாக இருக்கிறேன். பின்பு என் அத்தைக்கு மருமகனாக இருக்கிறேன்.

தமிழ் படித்தால் வேலை கிடைக்காது என்று சொல்கிறார்கள். ஆனால் தமிழ் எங்களுக்கு உயிர் என்று சொல். ஒரு தமிழன் இந்த நாட்டை ஆட்சி செய்தால் தான் நாடு நல்லா இருக்கும் என்றால், தமிழன் ஒருநாள் நாட்டை ஆட்சி செய்வான். நம் நாட்டை ஒரு தமிழன் ஆட்சி நடத்தக்கூடிய காலம் எப்போது வரும் என்றால், நம் மாநிலத்தின் முதல்வர் சிறப்பாக அந்த மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றால் அந்த நாட்டின் முதல்வரே பிரதமர் ஆக்க முன்வரார்கள்.

ஆனால் இங்கு இருக்கக்கூடிய திராவிட மாடல் ஆட்சியை கடைப்பிடித்தால் ஓட்டுக்கு 500 ரூபாய் தான் கிடைக்கும். ஓட்டுக்கு காசு கொடுக்கும் மாறாதவரை எந்த ஒரு புரட்சியும் நடக்காது. உங்களுக்கான தலைவர்களை பொழுதுபோக்கு கேளிக்கை தளத்தில் தேடாதீர்கள். போராட்டக் களத்தில் தேடுங்கள். ந6 மாதம் பயன்படுத்தும் சட்டையும், செல்போனையும் தேர்ந்தெடுக்க இவ்வளவு யோசிக்கும் நீங்கள், உங்களுக்கான தலைவரை தேர்ந்தெடுக்க ஆழமாக யோசிக்க வேண்டும்” என்றார்.

சீமான் பேசியதன் வீடியோ காணொளி இங்கே...