சீமான், நாம் தமிழர் கட்சி
சீமான், நாம் தமிழர் கட்சி PT
தமிழ்நாடு

"கருணாநிதி, ஜெயலலிதாவையே பாத்திருக்கோம்; விஜய் வருவதால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை" – சீமான்

Kaleel Rahman, webteam

தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு கேரளாவிற்கு கனிம வளங்களை கடத்திச் செல்வதை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வருகை தந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்...

”செந்தில்பாலாஜி கட்டுப்பாட்டில் 60 எம்.எல்.ஏக்கள்”

”அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி கட்டுபாட்டில்தான் திமுக கட்சி உட்பட 60 எம்எல்ஏக்கள் உள்ளனர். கட்சியின் பல்வேறு மூத்த நிர்வாகிகளுக்கு மாத மாதம் சம்பளம் வழங்கி வருகிறார். அமலாக்கத்துறை விசாரணையில் அவர் வாய்திறந்தால் முதல்வர் ஸ்டாலின் உட்பட பலருக்கு சிக்கல் ஏற்படும் என்ற பயத்தால்தான் இது போன்ற வேலைகளில் தமிழக அரசு வேகம் காட்டி வருகிறது.

செந்தில்பாலாஜி

குறிப்பாக, அவர் ஊழல் மூலம் பெற்ற பணத்தை எப்படி பிரித்துக் கொடுத்தார் என்பது வெளிவரும். அதனால் முதல்வர் பயப்படுகிறார்.

”மலை வளம் மக்களுக்கானது, அது வியாபாரப் பொருள் அல்ல

மலை வளம் மக்களுக்கானது, அது வியாபாரப் பொருள் அல்ல. அதனைக் கொண்டு சென்று அண்டை மாநிலத்திற்கு தாரை வார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

”விஜய்யின் பேச்சு எங்களுக்கே வலுசேர்க்கும்”

நான் பேசிவருவதையே விஜய் பேசி வருகிறார். அதனால் அவர் பேசியது எங்களுக்கே வலுசேர்க்கும். வாக்குக்கு காசு கொடுக்கும் இடத்தில் தான் ஊழல் உருவாகிறது. காசு கொடுத்து வாக்கு பெற்ற எந்த அரசியல்வாதிகளுக்கும் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துகிற எண்ணம் வராது.

”மாணவர்கள் எல்லா தலைவர்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளட்டும்”

மாணவர்கள் எல்லா தலைவர்களை பற்றியும் படித்து தெரிந்து கொண்டு, யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

vijay

குறிப்பாக, ஹிட்லர் உட்பட அனைத்து தலைவர்களை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற எல்லா தலைவர்களின் கருத்தையும் படித்து தெரிந்து கொண்டு நல்லதை மட்டும் மாணவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

”விஜய் தம்பி நான் அண்ணன்.. அவரால் எங்களுக்கு பாதிப்பில்லை”

”விஜய் அரசியலுக்கு வருவதால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. கருணாநிதி, ஜெயலலிதா இருந்த காலத்திலேயே அரசியலுக்கு வந்தவர்கள் நாங்கள். அவர் வேற, நான் வேற இல்லை; எங்களுக்குள்ள இருக்கிற பந்தம் அண்ணன், தம்பி மட்டும் தான்”

”சட்டம் ஒழுங்கு சரியில்லை”

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது மிகவும் மோசமாக உள்ளது. குறிப்பாக, கடந்த இரண்டு தினங்களில் தென்காசி மாவட்டத்தில் மட்டும் 3 கொலைகள் நடந்துள்ளது.

விஜய்

”தமிழரை வேட்பாளராக அறிவித்தால் பாஜகவை ஆதரிப்போம்”

வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் ஒரு தமிழ் வேட்பாளரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பாஜகவுக்கு துணிவிருந்தால், தாங்கள் கண்டிப்பாக அவர்களை ஆதரிக்கிறோம்.

என்று பேசியுள்ளார் சீமான்.