செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி தலைவர் ஸ்ரீராம், மற்றும் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் வைரமுத்து, ஆகியோர், நாம் தமிழர் கட்சியில் பயணித்து வருகின்றனர்.
இந்நிலையில், வாணியம்பாடி தொகுதியைச் சேர்ந்த சிலர் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் வாணியம்பாடியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் தேவேந்திரன் என்பவர் வைரமுத்து, ஸ்ரீராம் ஆகியோரது பெயரை எழுதிக் கொடுத்துள்ளார். இதையடுத்து நேற்று (08.02.2025) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செய்தியாளர் சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர், வேல்முருகன், ஸ்ரீராம், மற்றும் வைரமுத்து ஆகியோர் தங்களது கட்சியில் இணைந்து விட்டதாக அறிவித்தார். நாங்கள் இதுவரையில் நாம் தமிழர் கட்சியில் இருக்கிறோம்.
உண்மை தன்மை அறியாமல் செய்தி வெளியிட்ட வேல்முருகன், தங்களது பெயரை கெடுத்து விட்டதாகவும், இதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் என நாம் தமிழர் கட்சியினர், வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.