மதுரை அருகே நாட்டு நலப்பணி திட்டத்திற்காக சென்ற கல்லூரி மாணவி கல்குவாரியில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் ஒத்தக்கடை பகுதியில் முகாம் அமைத்து நாட்டு நலப்பணிகள் செய்து வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கல்குவாரியை பார்ப்பதற்காக கல்லூரி மாணவிகள் சிலர் சென்றபோது, மாணவி ரம்யா கால் தவறி கல்குவாரிக்குள் விழுந்து நீரில் மூழ்கினார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் சுமார் 5 மணி நேரம் போராடி மாணவி ரம்யாவின் உடலை மீட்டனர். இதுதொடர்பாக ஒத்தக்கடை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.