தமிழ்நாடு

மின்கட்டணம் செலுத்த புதிய ஆப் அறிமுகம்

மின்கட்டணம் செலுத்த புதிய ஆப் அறிமுகம்

webteam

மின்சாரக் கட்டணத்தை எளிய முறையில் செலுத்த உதவும் புதிய செயலியை தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி அறிமுகம் செய்து வைத்தார்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்பகிர்மான அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், TANGEDGO என்ற பெயரில் செயலியை அறிமுகம் செய்து வைத்த அவர், மின்கட்டணத்தை செலுத்த வரிசையில் நிற்பதைத் தவிர்க்கும் வகையில் இந்த செயலியை அறிமுகப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். இந்தச் செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செயலியில் மின் இணைப்பிற்கான பதிவெண்ணைக் கொண்டு எளிதாக கட்டணத்தைச் செலுத்தலாம்.

மேலும், மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தால் விரைவாக வழங்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து வருவதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். மின்கட்டணம் செலுத்தும் செயலியை அறிமுகம் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின்சார வாரியத்தின் இழப்பு விரைவில் தவிர்க்கப்படும் என்றும் தெரிவித்தார். தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்வதாகவும் அமைச்சர் தங்கமணி கூறினார்.