தமிழ்நாடு

காவல் நிலையத்திற்கு மின் இணைப்பை துண்டித்த விவகாரம்: மூன்று பேருக்கு நோட்டீஸ்

காவல் நிலையத்திற்கு மின் இணைப்பை துண்டித்த விவகாரம்: மூன்று பேருக்கு நோட்டீஸ்

EllusamyKarthik

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கடந்த 30-ஆம் தேதி மின் வாரிய ஊழியரின் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்த காரணத்திற்காக, கூமாபட்டி காவல் நிலையத்தில் இரண்டு மணி நேரம் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. 

கூமாபட்டியில், மின்வாரிய ஊழியர் சைமன் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததுடன், அதில் 3 பேர் வந்ததால் சைமனின் வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது. 

இதனையடுத்து காவல் நிலையத்திற்கு சுமார் இரண்டு மணி நேரம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதவி மின் செயற்பொறியாளரிடம் புகார் தெரிவித்ததை தொடர்ந்து உதவி மின் பொறியாளர் கோபால்சாமி மற்றும் ஊழியர் தங்கேஸ்வரன் மற்றும் சைமன் ஆகியோருக்கு நோட்டீஸ் வழங்கி செயற்பொறியாளர் உத்தரவிட்டுள்ளார்.