தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு - “இறந்தவருக்கு நோட்டீஸ் அளித்த ஆணையம்”

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு - “இறந்தவருக்கு நோட்டீஸ் அளித்த ஆணையம்”

webteam

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஒருவருக்கு, விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ம் தேதி காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் குடும்பத்தினரை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தி வருகிறது. 

இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் ஒருவரான கிரேஸ்புரத்தைச் சேர்ந்த கிளாட்சன் என்பவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக கிளாட்சனின் சகோதரி கேட்டபோது, அவரின் மனைவி ஜேசுராணிக்கு அனுப்புவதற்கு பதிலாக அவரின் பெயருக்கே தவறுதலாக நோட்டீஸ் வந்துள்ளதாக விசாரணை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.