ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வது தொடர்பாக நடிகர் ஜெய்யிடம் விளக்கம் கேட்டு, திருவான்மியூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சென்னையில் நடிகர் ஜெய் ஓட்டி வந்த சொகுசுக் கார், அடையாறு மேம்பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. குடிபோதையில் கார் ஓட்டியது தெரியவந்ததையடுத்து ஜெய் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஏற்கனவே 2014-ஆம் ஆண்டும் இதேபோன்று குடிபோதையில் விபத்தை ஏற்படுத்தியுள்ளதால் அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வது தொடர்பாக நடிகர் ஜெய்யிடம் விளக்கம் கேட்டு, திருவான்மியூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.