தமிழ்நாடு

பொருளாதாரம் வளர்ச்சியடைய அம்மனுக்கு நோட்டு அலங்காரம்

பொருளாதாரம் வளர்ச்சியடைய அம்மனுக்கு நோட்டு அலங்காரம்

webteam

நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டி‌ கரூர் மாவட்டம் குளித்தலை அருகே புதிய ரூபாய் நோட்டுகளால் கோயில் கருவறை முழுவதும் அலங்கரித்து, குத்துவிளக்கு பூஜை செய்து பெண்கள் வழிபட்டனர். 

ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும் என பிரார்த்தனை செய்து சிந்தலவாடி மகா மாரியம்மன் கோயிலில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் குத்துவிளக்கு பூஜை செய்தனர். அதற்காக ஒரு ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரையுள்ள 2 லட்சம்‌ புதிய ரூபாய் நோட்டுகளைக் கொண்டு மாரியம்மனையும், கோயில் கருவறை முழுவதையும் பணத்தால் அலங்கரித்திருந்தனர்.‌ இந்தச் சிறப்பு பூஜையில் சிந்தலவாடி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.