ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் pt
தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : 3 ஆம் இடம் பிடித்த நோட்டா.. டெபாசிட் வாங்குமா நாதக?

நாதகவை பின்தொடரும் நோட்டா... என்ன நிலவரம் பார்க்கலாம்.

ஜெனிட்டா ரோஸ்லின்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 46 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். மொத்தம் 67.97 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஈரோடு (கிழக்கு) இடைத்தேர்தல்...

இந்நிலையில், இதற்கான வாக்கு எண்ணிக்கையானது காலை 8.20 மணியளவில் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. வாக்கு எண்ணும் அறையில் 14 மேசைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு திமுக , நாதக ஏஜெண்டுகளை வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கவில்லை என்று இரு கட்சியினர் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நாதகவை தொடரும் நோட்டா

இப்படி வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே பரப்பரப்பாக சென்றுகொண்டிருக்கும் ஈரோடு வாக்கு எண்ணும்மையம்.

இதன்படி, முதலாவதாக எண்ணப்பட்ட தபால் வாக்கு எண்ணிக்கை நிறைவில் திமுக வேட்பாளர் -197 வாக்குகளை பெற்று முன்னிலை வகித்தார். ஆனால், நாதக-13, நோட்டா-8 வாக்குகளும், மற்றவை-15, 31 சுயேட்சை வேட்பாளர்கள் 0 வாக்குகள் பெற்றுள்ளனர். நிராகரிக்கப்பட்டது-18.

நோட்டா

இதன்படி, தேர்தலில் போட்டியிட்ட யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை எனும் விருப்பத்தை பலர் தேர்வு செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

3 ஆம் இடம் பிடித்த நோட்டா!

தொடர்ந்து, நான்காம் சுற்று நிலவரப்படி,

திமுக - 31020

நாதக - 6034

நோட்டா-1204

5ம் சுற்று நிலவரம்

திமுக - 37001

நாதக - 7668

நோட்டா - 1584

இரு மடங்காக பதிவான நோட்டா!

கடந்த முறையைவிட அதிக நோட்டா வாக்குகள்!

2023 ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 798 வாக்குகள் நோட்டாவில் பதிவாகி இருந்தது. 2025 இடைத்தேர்தலில் ஐந்து சுற்றுகள் முடிவில் 1584 வாக்குகள் நோட்டாவில் பதிவாகியுள்ளது.

இதன்படி, கடந்த இடைத்தேர்தலில் பெற்ற மொத்த வாக்குகளை விட இந்த இடைத் தேர்தலில் ஐந்து சுற்றிலேயே இரு மடங்காக பதிவாகியிருக்கிறது நோட்டா வாக்குகள்.

6ம் சுற்று நிலவரம்

திமுக - 43488

நாதக - 9152

நோட்டா - 1645

7ம் சுற்று நிலவரம்

திமுக- 49312

நாதக - 10587

நோட்டா- 2345

மேலும், கடந்த முறை நாம் தமிழர் கட்சி 10827 வாக்குகள் பெற்றிருந்தனர். எட்டாம் சுற்று நிலவரப்படி 10 ஆயிரத்து 897 வாக்குகளை தற்போது பெற்றுள்ளனர். ஆனால், தற்போது கடந்த இடைத்தேர்தலை விட அதிக வாக்குகளை பெற்றிருக்கிறது நாம் தமிழர் கட்சி.