தமிழ்நாடு

மீனவர்கள் 12 மணி நேரத்துக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் - வானிலை மையம் எச்சரிக்கை

மீனவர்கள் 12 மணி நேரத்துக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் - வானிலை மையம் எச்சரிக்கை

மீனவர்கள் அடுத்த 12 மணி நேரத்துக்கு மீன் பிடிப்பதற்காக கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நான்களாக அரபிக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் இன்று கூறியது " தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலு இழந்து காற்றழுத்த பகுதியாக மாறியுள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் தொடர்ந்து நிலவி வருகிறது. 
இந்தக் காற்றழுத்த தாழ்வு பகுதி படிபடியாக வலு இழக்கும்.அடுத்த 24மணி நேரத்தை பொருத்தவரை தமிழகத்தில் உள் மாவட்டத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு  உள்ளது. மீனவர்கள் லட்சத்தீவு மற்றும் வடக்கு கேரள, தெற்கு கர்நாடக பகுதியில் 12மணி நேரத்திற்கு மீன்பிடிக்கச்செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.