தமிழ்நாடு

நாகையில் கனமழையால் பயிர்கள் நீரில் மூழ்கின: விவசாயிகள் வேதனை

webteam

நாகை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதியில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. நாகை மாவட்டத்தில் கடந்த  6 நாட்களாக பெய்து வரும் கனமழையில், சீர்காழியில் மட்டும் 71 சென்டி மீட்டர் மழை பதிவாகியிருக்கிறது. மஞ்சளாறு, நண்டோடையார், உப்பனாறு, ராஜேந்திரன் வாய்க்கால், ஆக்கூரான் , திருநகரி உள்ளிட்ட வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு நூற்றுக்கணக்கான கிராமங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. 

நாகையில் 3,40,000 ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பயிர்கள் 5நாட்களாக மூழ்கியிருக்கிறது.  நீரை வெளியேற்ற வடிகால் இல்லாததால் மீட்க வாய்ப்பில்லை என விவசாயிகள் வேதனை  தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.