தமிழ்நாடு

வடகிழக்கு பருவமழை மிதமா‌க இருக்கும்: வானிலை மையம் தகவல்

webteam

2017ஆம் ஆண்டுக்கான வடகிழக்கு‌ பருவமழை இயல்பாகவே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்‌ளது.

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழையானது, அதிக அளவு பெய்துள்ள நிலையில், வடகிழக்கு பருவமழை இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது. வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டு குறைவாக பெய்த நிலையில், இந்த‌ ஆண்டு மிதமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு 89 சதவீதம் முதல் 111 சதவீதம் வரை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தெற்கு தீபகற்பத்தை உள்ளடக்கிய தமிழகம், கடலோர ஆந்திரா, கர்நாடகாவின் தெற்கு உள்மாவட்டங்கள், ராயலசீமா, கேரளா ஆகிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இயல்பாகவே பெய்யும் எ‌ன வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.