கனமழை file photo
தமிழ்நாடு

வடகிழக்குப் பருவமழை: 24 மணி நேர மின்சாரம், மருத்துவ சேவைக்கு அரசு தயார்!

வடகிழக்குப் பருவமழைக்கு தயாராகும் வகையில் 24 மணி நேர மின்சாரம், மருத்துவ சேவைக்கு அரசு தயாராகியுள்ளது.

PT WEB

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை காரணமாக அவசரகால நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. 24 மணி நேர மின்சாரம், ஆக்சிஜன் வசதி, வென்டிலேட்டர்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. நோய் பரவல் தடுப்பு, உயிரிழப்பு தடுப்பு மற்றும் தடையற்ற மருத்துவ சேவைக்கு சுகாதாரத் துறை முழு முன்னெச்சரிக்கையுடன் செயல்படுகிறது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து, நோய் பரவல் தடுப்பு, உயிரிழப்பு தடுப்பு மற்றும் தடையற்ற மருத்துவச் சேவை ஆகிய 3 இலக்குகளுடன் அவசரகால நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பாம்புக்கடி விஷமுறிவு மருந்துகள், ஓ.ஆர்.எஸ்., குளோரின் மாத்திரைகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவப் பொருட்களும் 7 நாட்களுக்குத் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 24 மணி நேர மின்சாரம், ஆக்சிஜன் வசதி, வென்டிலேட்டர்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ்கள் முழு தயார் நிலையில் உள்ளன.

சென்னையில் கனமழை

சென்னை, திருவள்ளூர், கடலூர், கன்னியாகுமரி உட்பட 15 கடலோர மற்றும் வெள்ள அபாய மாவட்ட சுகாதார நிலையங்களுக்குச் சிறப்பு முன்னுரிமை வழங்கப்பட்டு, மருத்துவமனை வளாகங்களில் நீரிறைக்கும் பம்புகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

டெங்கு, எலிக்காய்ச்சல் பரவாமல் தடுக்கக் குடிநீரில் குளோரினேற்றம் செய்யவும், கொசுப்புழு ஒழிப்புப் பணிகளை தீவிரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. காய்ச்சல் ஏற்பட்டால் உடனே அரசு மருத்துவமனையை அணுக வேண்டும்; பிரசவக் காலம் நெருங்கிய கர்ப்பிணிகள் முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு மாற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.