வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 15ம் தேதிக்கு பின் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை 8ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, டிட்லி புயலாக மாறி ஒரிசா நோக்கிச் சென்றதால், தமிழகத்தில் பருவ மழை தொடங்கவில்லை. இருப்பினும் தமிழகத்தில் அவ்வப்போது லேசான மழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் காற்றின் திசை மாறிய பிறகு, 15ஆம் தேதி அளவில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனிடையே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.