தமிழ்நாடு

“வடகிழக்கு பருவமழை அடுத்த சில தினங்களுக்கு தொடரும்” - வானிலை மையம்

“வடகிழக்கு பருவமழை அடுத்த சில தினங்களுக்கு தொடரும்” - வானிலை மையம்

webteam

வடகிழக்குப் பருவமழை முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த சில தினங்களுக்கு மழை தொட‌ரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக நாகை மாவட்டம் கொள்ளிடம் மற்றும் புதுச்சேரியில் 9 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மை‌ய தென் மண்‌டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

மேலும் அடுத்த சில தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் வடகிழக்குப் பருவமழை‌ தொடரும் எனவும் அவர் கூறினார்.