தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 9 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் நிறைவடையும். கடந்த 2016-ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம் ஏமாற்றத்தையே சந்தித்து. இதனால் 2017-ஆம் ஆண்டு தொடக்கத்தில் கடும் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டது. இதனிடையே, 2017-ஆம் ஆண்டு தமிழகத்தில் 89 சதவீதம் முதல் 110 சதவீதம் வரை வடகிழக்கு பருவமழை மழை பெய்யும் என வானிலை மையம் கூறியிருந்தது. ஆனால், டிசம்பர் 4-ஆம் தேதிக்கு பிறகு மழையே தமிழகத்தில் பதிவாகவில்லை. அதனால், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 9 சதவீதம் குறைவாகவே பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வழக்கம்போல இந்த முறையும் வடகிழக்கு பருவமழை தமிழகத்திற்கு ஏமாற்றத்தையே தந்துள்ளது. இருப்பினும் பெரும்பாலான ஏரிகள், குளங்களில் தண்ணீர் இருக்கின்றது. நிலத்தடி நீரும் உயர்ந்துள்ளது.