நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி போன்ற இடங்களில் பலத்த மழை பெய்ததால் குளிர்ந்த காலநிலை நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் இன்று காலை சற்று அதிக வெப்பநிலைக் காணப்பட்டது. இந்நிலையில் மதியம் முதல் உதகை பேருந்து நிலையம், பைக்காரா படகு இல்லம், குன்னூரில் டால்பினோஸ், லேம்ஸ்ராக், பேருந்து நிலையம் உள்ளிட்டப் பகுதிகளில் பலத்த மழைப் பெய்தது. தொடர்ந்து மாலை நேரத்தில் கோத்தகிரி பகுதியிலும் பரலலாக பெய்தது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. இந்த மழையால் சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகளிலேயே முடங்கினர். மேலும் முக்கிய சுற்றுலாத்தலங்களை காண முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.