தமிழ்நாடு

நியமனப் பொதுச் செயலாளருக்கு அதிகாரம் இல்லை : ஒபிஎஸ்

நியமனப் பொதுச் செயலாளருக்கு அதிகாரம் இல்லை : ஒபிஎஸ்

webteam

அதிமுகவின் சட்டவிதிகள்படி பொதுச்செயலாளர் இல்லாத அசாதாரணமான சூழலில், அவைத்தலைவர், பொருளாளர், தலைமை நிலையச் ‌செயலாளர் ஆகியோர் கட்சியை வழிநடத்தலாம் எனவும் நியமனப் பொதுச் செயலாளருக்கு அதிகாரம் இல்லை எனவும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு நீலகிரி மாவட்டத்திலுள்ள படுகர் இன மக்களின் ஒருபிரிவினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். சென்னை கீரின்வேவ்ஸ் சாலையிலுள்ள பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு வந்த அவர்கள் அவரது அணிக்கு ஆதரவளிப்பதாகக் கூறினர். பின்னர், படுகர் இன மக்கள் தங்களுடைய பாரம்பரிய நடனத்தை ஆடி, பன்னீர்செல்வத்திற்கு வரவேற்பு தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவின் சட்டவிதிகள் படி பொதுச்செயலாளர் இல்லாத அசாதாரணமான சூழலில், அவைத் தலைவர், பொருளாளர், தலைமை நிலையச் ‌செயலாளர் ஆகியோர் கட்சியை வழிநடத்த அதிகாரம் உண்டு என்றும், நியமன பொதுச் செயலாளருக்கு ‌எந்த அதிகாரமும் இல்லை எனவும் கூறினார்.