தமிழ்நாடு

எந்த அணிக்கும் ஆதரவில்லை: எம்எல்ஏ நட்ராஜ்

எந்த அணிக்கும் ஆதரவில்லை: எம்எல்ஏ நட்ராஜ்

Rasus

அதிமுகவில் எந்த அணியையும் சாராமல் இருப்பதாக மயிலாப்பூர் எம்எல்ஏ நட்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில், அதிமுக ஒற்றுமையாக ஒருமித்த கருத்துடன் இருப்பதையே தாம் விரும்புவதாகக் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமோ அல்லது வேறு ஒருவரோ யாராயிருந்தாலும் சட்டப்பேரவையில் ஒரே அணியாக சர்ச்சை ஏதுமின்றி அதிமுக இருக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் நட்ராஜ் குறிப்பிட்டுள்ளார்.

ஏதோ ஒரு அணிக்கு, தான் ஆதரவாக இருப்பதாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்திய நாளில் இருந்தே, சசிகலா தரப்பில் இருந்து பிரிந்து பலரும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இணைந்து வருகின்றனர்.