தமிழ்நாடு

மத்திய அரசுக்கு எந்த அறிக்கையும் அனுப்பவில்லை: தமிழக ஆளுநர் மாளிகை திட்டவட்டமாக மறுப்பு

மத்திய அரசுக்கு எந்த அறிக்கையும் அனுப்பவில்லை: தமிழக ஆளுநர் மாளிகை திட்டவட்டமாக மறுப்பு

webteam

மத்திய அரசுக்கு ஆளுநர் அறிக்கை எதையும் அனுப்பவில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

முன்னதாக தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து தலைமைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்திய பின் மத்திய அரசுக்கு அறிக்கை ஒன்றை ஆளுநர் அனுப்பியதாகத் தகவல் வெளியானது. இதனை தமிழக ஆளுநர் மாளிகை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கோ, குடியரசு தலைவருக்கோ அறிக்கை அனுப்பவில்லை என்று கூறப்பட்டுள்ளது.