தமிழ்நாடு

பிளாஸ்டிக் அரிசி என்ற பேச்சுக்கே இடமில்லை: அமைச்சர் காமராஜ் விளக்கம்

பிளாஸ்டிக் அரிசி என்ற பேச்சுக்கே இடமில்லை: அமைச்சர் காமராஜ் விளக்கம்

webteam

தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி என்ற பேச்சுக்கே இடமில்லை என உணவுத்துறை அமைச்சர் காமராஜ்  தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பிளாஸ்டிக் அரிசி குறித்த அச்சம் நிலவிவரும் நிலையில் இதுகுறித்து தமிழக  உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து புதிய தலைமுறை  செய்தியாளரிடம் பேசிய காமராஜ், தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி என்ற பேச்சுக்கே இடமில்லை.  மக்களுக்கு தேவையான அரிசி ரேஷன் கடைகளில் மலிவு விலையில் தரப்படுவதால், பிளாஸ்டிக்  அரிசிக்கு வாய்ப்பில்லை. தமிழகத்தில் தனியார் விற்பனை செய்யும் அரிசியின் விலையும் கட்டுக்குள்  உள்ளது. பிளாஸ்டிக் அரிசி விற்பனை குறித்து புகார் அளித்தால் கடுமையான நடவடிக்கை  எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.