கொரோனா  முகநூல்
தமிழ்நாடு

”கொரோனா பரவல் குறித்து பதற்றம் அடைய வேண்டாம்” - அமைச்சர் விளக்கம்!

ஒமைக்ரான் பரவல்: பெரும் பாதிப்பு இல்லை, பதற்றம் வேண்டாம் - அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்.

ஜெனிட்டா ரோஸ்லின்

சமீபகாலமாக கொரானா தொற்று இந்தியா முழுவதும் அதிகரித்துவருவதை காணமுடிகிறது. இந்தியாவில் 2 ஆயிரத்திற்கும் மேல் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். சமீபத்தில், சென்னை மறைமலை நகரைச் சேர்ந்த 60 வயதான நபர் ஒருவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர், மா,சுப்ரமணியன்,

அதில், ” கொரோனா உருமாற்றம் பெற்று வருகிறது. இந்தியா முழுவதும் 1800-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. வீரியம் இல்லாத ஒமைக்ரான் வகையிலான தொற்று தற்போது பரவி வருகிறது. ஆனாலும் பெரிய பாதிப்பு ஏற்படுத்துவது இல்லை. ஒமைக்ரான் வகையிலான கொரோனாவால் யாரும் பதற்றம் அடைய தேவை இல்லை. பதற்றம் அடைய வேண்டியதில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகமே சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது .

அதில், கை கழுவுதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது . எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோர், இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும். தவறான தகவல்களை பரப்பி பதற்றத்தை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். தமிழகத்தில் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. புனே ஆய்வு மையத்துக்கு 17 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன.

கொரோனா பரவல் குறித்து பதற்றம் அடைய வேண்டாம். தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகரித்து உள்ளது. 1,000 ஆண் குழந்தைகளுக்கு 931 பெண் குழந்தைகள் இருந்த நிலை மாறி 940 ஆக அதிகரித்துள்ளது. ” என்று தெரிவித்துள்ளார்.