தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலுக்கு பயப்படவில்லை: வைகைச் செல்வன்

உள்ளாட்சி தேர்தலுக்கு பயப்படவில்லை: வைகைச் செல்வன்

Rasus

தற்போதுள்ள சூழலில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால் ஆளும்கட்சி தோல்வியை சந்திக்கும் என்பதால் அவர்கள் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இல்லை என்ற மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டை அதிமுக அம்மா அணியின் வைகைச் செல்வன் மறுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பேசியபோது, 2011-ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அனைத்து மாநகராட்சிகள் உள்பட அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றது. எனவே உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதை கண்டு பயப்பட வேண்டிய அவசியம் அதிமுக அம்மா அணிக்கு இல்லை என மு.க.ஸ்டாலினுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்தல் ஆணையத்தில் பல்வேறு சிக்கல்கள் இருக்கலாம். அது அவர்களின் நிலைப்பாடு. தேர்தலுக்கு அரசு எப்போதுமே அஞ்சியது கிடையாது எனக் கூறினார்.