கடலூர் அருகே அரசு மருத்துவமனையில் போதிய இட வசதியின்றி நோயாளிகள் தரையில் படுத்து சிகிச்சை எடுத்துக்கொள்ளும் அவலநிலை தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அரசு மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு விருதாச்சலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் இருந்து ஏராளமான புறநோயாளிகள் உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது காய்ச்சல் அதிகமாக பரவி வருவதால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இங்கு சிகிச்சை பெறும் உள் நோயாளிகளுக்கு போதிய படுக்கை வசதி இல்லாமல் தரையில் பாய் விரித்து படுத்து சிகிச்சை பெறும் நிலை தொடர்வதாக நோயாளிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் காய்ச்சல் அதிகம் உள்ள கிராமப்பகுதிகளில் சிறப்பு முகாம்களை அமைத்து காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.