தமிழ்நாடு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டிற்கு டெபாசிட் இல்லை..!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டிற்கு டெபாசிட் இல்லை..!

Rasus

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க டெபாசிட் கிடையாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கிராம குழுவினருடன், ஜல்லிக்கட்டு நடைபெறும்போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. அப்போது, ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள், அவற்றின் உரிமையாளர்கள் விவரம் வழங்கப்பட வேண்டும் எனவும், மாடுகளை கால்நடை மருத்துவர்கள் முழு பரிசோதனை செய்த பிறகு போட்டிக்கு அனுமதிக்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார். போட்டிகளில் பங்கேற்க டெபாசிட் கிடையாது என்றும் ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவித்தார்.

இதனிடையே, அவனியாபுரத்தில் 5ஆம் தேதி ஜல்ல‌க்கட்டு நடைபெறுவதை முன்னிட்டு, வாடிவாசல், பார்வையாளர் இருக்கை, மேடை உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. சுமார் 20 ஆயிரம் பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாக விழா குழுவினர் தெரிவித்தனர்.