தமிழ்நாடு

எம்எல்ஏக்களிடம் ஜாதிப் பாகுபாடு காட்டும் எண்ணம் இல்லை: முதலமைச்சர்

எம்எல்ஏக்களிடம் ஜாதிப் பாகுபாடு காட்டும் எண்ணம் இல்லை: முதலமைச்சர்

webteam

எம்எல்ஏக்களிடம் ஜாதி பாகுபாடு காட்டும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கோடை விழாவைத் தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்எல்ஏக்களிடம் ஜாதி பாகுபாடு காட்டும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை என்றார். 
அதிமுகவின் இரண்டு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் தெரிவித்தார். முதலமைச்சரை அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் அணி அணியாக சந்தித்த நிலையில், முதலமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். அமைச்சர் பதவிக்காக எம்எல்ஏக்கள் சந்தித்ததாக தகவல் வெளியான சூழலில், அமைச்சரவையில் மாற்றம் இருக்காது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.