தேன்கனிக்கோட்டை மலைகிராம மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல தினமும் பேருந்தில் அந்தரத்தில் ஆபத்தான பயணம் செய்து வருகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வரும் மலைகிராம மாணவர்கள், பள்ளி நேரத்தில் பேருந்து வசதி இல்லாததால் கூட்ட நெரிசலில் ஆபத்தான முறையில் அந்தரத்தில் பயணம் செய்து வருகிறார்கள்.
பள்ளி மாணவர்களின் ஆபத்தான முறையில் பேருந்தில் பயணம் செய்வதால் விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. விபத்தை தவிர்க்க உடனே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பள்ளி நேரங்களில் கூடுதலான பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.