தமிழ்நாடு

தொடர் மழை : சதுரகிரி மலைக்கு செல்ல தடை

தொடர் மழை : சதுரகிரி மலைக்கு செல்ல தடை

webteam

தொடர் மழை காரணமாக, ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு வனத்துறை தடைவிதித்துள்ளது.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில், கடல்மட்டத்திலிருந்து நான்காயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. சித்தர்கள் இன்றளவும் வாழும் மலையாக கருதப்படும் இங்கு சுயம்பு வடிவாக அருள்பாலிக்கும் சுந்தர மகாலிங்கத்தை தரிசனம் செய்ய இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் பயணிகள் வருவது வழக்கம்.

இங்கு ஆண்டு முழுவதும் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 10 பக்தர்கள் உயிரிழந்ததால், சிவராத்திரி, பவுர்ணமி, பிரதோஷம், அமாவாசை ஆகிய நாட்களில் மட்டுமே தற்போது அனுமதி அளிக்கப்படுகிறது. தற்போது அமாவாசையொட்டி, 12 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எனினும் தொடர் மழை காரணமாக அந்த அனுமதியை வனத்துறையினர் ரத்து செய்தனர். இதனால், கோயிலுக்குச் செல்வதற்காக வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.