என்.எல்.சி சுரங்கத்தில் தனியார் மயமாக்கலை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் உள்ள சுரங்கங்களில் தனியார் மயத்தை ரத்து செய்ய வேண்டும். அனைத்து தொழிலாளர்களின் வாழ்வதாரம் பாதுகாக்கப்பட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும். போனஸ், ஊக்கத்தொகை பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து என்.எல்.சியில் பணிபுரியும் அனைத்து நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிற்சங்கம் சார்பில் தொழிலாளர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். மேலும் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றவிட்டால் அடுத்து மிகப்பரிய போராட்டம் நடத்த போவதாக தெரிவித்துள்ளனர்.