கடலூரில் என்.எல்.சி. சுரங்க மண் மழை நீரில் அடித்து வரப்பட்டதால் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் கம்மாபுரம் பகுதியில் என்.எல்.சி. சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் மண் குவியல் மழை நீரில் அடித்து வரப்பட்டதால் 3௦ ஏக்கர் விளைநிலம் நாசமடைந்துள்ளது. தொடர்ந்து பெய்த மழையால் சுரங்க மண் நீரில் அடித்துவரப்பட்டு விளைநிலத்தின் மேல் 4 அடி வரை படிந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதனால் பயிர்கள் அழுகியுள்ளதால் நெல் அறுவடை செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மழைநீருடன் சுரங்க மண் படியும் விவகாரத்தில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.