தமிழ்நாடு

“விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம்” - என்.எல்.சி அறிவிப்பு 

“விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம்” - என்.எல்.சி அறிவிப்பு 

webteam
நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. 
 
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்திய அரசின் என்.எல்.சி. நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்ததால் இங்கே மின் உற்பத்தி வேலைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.  இதனிடையே மத்திய அரசு பொது முடக்கத்திற்கான விதிமுறைகளைத் தளர்த்தியதால் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. 
 
 
 
இதனிடையே கடந்த 7 ஆம் தேதி  இங்குச் செயல்பட்டு வந்த இரண்டாவது அனல் மின் நிலையத்தில் இன்று திடீரென்று பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கிய 7 பேருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் மூலம் கிடைத்தது. இதனால் ஒட்டு மொத்தமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. மேலும் இந்தத் தீ விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடந்து வந்தது. 
 
 
இந்நிலையில் என் எல் சி விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும்  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பும் அளிக்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்தார் அனைவரும் இன்று என்.எல்.சி இரண்டாம் அனல் மின் நிலையத்தின் முன்புக் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நிவாரணம் வழங்க வேண்டி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். அதன் தொடர்ச்சியாக இந்த அறிவிப்பை நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் அறிவித்துள்ளது.