நிவர் புயலானது புதுச்சேரியில் இருந்து 50கிமீ வடமேற்கு நிலப்பகுதியில் நிலைகொண்டுள்ளது
தீவிரப் புயலாகவும், அதி தீவிரப் புயலாகவும் வலுவடைந்து வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த 'நிவர்', நேற்றிரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை மூன்று மணி நேரம் புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதிதீவிர புயலாக நகர்ந்து வந்த நிவர் தீவிரப் புயலாக வலுவிழந்து கரையை கடந்தது.
இந்நிலையில் நிவர் புயலானது புதுச்சேரியில் இருந்து 50கிமீ வடமேற்கு நிலப்பகுதியில் நிலைகொண்டுள்ளது. தற்போது தீவிர புயலாக உள்ள நிவர், அடுத்த 3 மணி நேரத்தில் மேலும் வலுவிழந்து புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக புதுச்சேரி, கடலூர் பகுதிகளில் மழை பெய்துகொண்டே இருக்கிறது.